Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தீபாவின் வேட்புமனு தள்ளுபடி?: ஏகப்பட்ட குளறுபடிகள்!

தீபாவின் வேட்புமனு தள்ளுபடி?: ஏகப்பட்ட குளறுபடிகள்!

Webdunia
வெள்ளி, 24 மார்ச் 2017 (12:37 IST)
ஆர்கே நகர் தொகுதியில் ஜெயலலிதாவின் அண்ணன் மகளான ஜெ.தீபா போட்டியிடுவதாக அறிவித்து நேற்று வேட்புமனுத் தாக்கல் செய்தார். இந்நிலையில் அவரது வேட்புமனு நிராகரிக்கப்பட வாய்ப்புள்ளதாக பரபரப்பு தகவல்கள் வருகின்றன.


 
 
வேட்புமனுத் தாக்கல் செய்ய நேற்று கடைசி நாள். இதனையடுத்து நேற்று மதியம் ஜெயலலிதாவின் நினைவிடத்துக்கு சென்ற தீபா வேட்புமனுவை வைத்து அஞ்சலி செலுத்திவிட்டு தண்டையார் பேட்டையில் உள்ள மண்டல அலுவலகத்தில் தேர்தல் அதிகாரியிடம் வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
 
தீபா தாக்கல் செய்த வேட்புமனுவில் பல குளறுபடிகள் உள்ளதாக தற்போது உறுதிசெய்யப்படாத தகவல்கள் வருகின்றன. தீபா வேட்புமனுவில் தனது கணவர் பெயரை குறிப்பிடவில்லை. தனது சொத்து மதிப்பு விபரமும் குறிப்பிடவில்லை.
 
மேலும் எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை சார்பாக போட்டியிடும் தீபா பேரவையின் பதிவு எண்ணையும் அதில் குறிப்பிடவில்லை. காரணம் பேரவையை இதுவரை பதிவு செய்யவில்லையாம். இன்னும் சில காரணங்களுக்காக தீபாவின் வேட்புமனு தள்ளுபடி செய்யப்படலாம் என அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் ஒரு விமான விபத்து.. இந்திய விமானப்படை விமானம் நொறுங்கி விழுந்ததால் அதிர்ச்சி..!

சாப்பிட வீட்டுக்கு வருகிறேன்.. அம்மாவுக்கு போன் செய்த டாக்டர் ஆற்றில் குதித்து தற்கொலை..!

தமிழ்நாட்டிலும் புல்டோசர் கலாச்சாரமா? திமுக நகராட்சி தலைவி வீடு இடிப்பு..!

இன்று ஒருநாள் மட்டும் ஹெல்மெட் அணிந்து பேருந்துகளை ஓட்டும் ஓட்டுனர்கள்..! என்ன காரணம்?

நமீபியாவில் உற்சாக வரவேற்பு.. டிரம்ஸ் வாசித்து மகிழ்ந்த பிரதமர் மோடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments