Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

’பேராசை’ - ஜெயலலிதாவின் அரசியல் வாரிசாக நினைக்கும் தீபா!

’பேராசை’ - ஜெயலலிதாவின் அரசியல் வாரிசாக நினைக்கும் தீபா!
, செவ்வாய், 30 ஆகஸ்ட் 2016 (14:22 IST)
முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா லண்டனில் இதழியல் படித்து பட்டம் பெற்றவர்.


 


இவர் சில நாட்களுக்கு முன்பு போயஸ் கார்டனுக்கு வந்து ஜெயலலிதாவை சந்திக்க வேண்டும் என்று கேட்டுள்ளார். கார்டன் வாசலில் சந்திப்பிற்கான காரணம் கேட்டுள்ளனர். தீபா அவரிடம், ”இந்த போயஸ் கார்டன் சொத்துக்கு நான்தான் உண்மையான வாரிசு. எங்க பாட்டி சந்தியா தெளிவா உயில் எழுதி வச்சிருந்தாங்க. அவங்களோட மகன், மகள் வயிற்றுப் பேரன், பேத்திகளுக்குத்தான் இந்தச் சொத்து சொந்தம். அப்படிப் பார்த்தா நான்தான் இந்த வீட்டு எஜமானி. நான் இங்க இருக்கிற என்னோட அத்தையைப் பார்க்கனும். அவங்களப் பார்க்க விடாம தடுக்க நீங்கள்லாம் யாரு மிஸ்டர்?” என்றார்.

இந்த தகவலை ஜெயலலிதாவிடம் கார்டன் விசுவாசிகள் கூறியுள்ளன. ஜெயலலிதாவை சந்திக்க தீபாவிற்கு அனுமதி அளிக்கப்படவில்லை. கார்டன் வாசலிலேயே ஒருமணி நேரம் அழுது கழித்து விட்டு தீபா திரும்பச்சென்றதாக கூறப்படுகிறது.

தீபாவுக்கு, ஜெயலலிதாவின் அரசியலில் வாரிசாக ஆக வேண்டும் என்று ஆசை இருப்பதாக கூறப்படுகிறது. அரசியலில் ஈடுபடுவது குறித்து பலமுறை அவர் ஜெயலலிதாக்கு கடிதம் எழுதியதாகவும் அதற்கு எந்தப் பதிலும் வரவில்லை எனவும் கூறப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட்டவர் கைது!