Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தடையை மீறி எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவிப்பேன்: தீபா ஆவேசம்!

தடையை மீறி எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவிப்பேன்: தீபா ஆவேசம்!

Advertiesment
தடையை மீறி எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவிப்பேன்: தீபா ஆவேசம்!
, செவ்வாய், 4 ஜூலை 2017 (12:19 IST)
வேலூரில் எம்ஜிஆர் உள்ளிட்ட தலைவர்கள் சிலைக்கு மாலை அணிவிக்க சென்ற தீபா ஆதரவாளர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இதனை கண்டித்து எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையின் பொதுச்செயலாளர் ஜெ.தீபா அறிக்கை வெளியிட்டுள்ளார்.


 
 
தீபா அணியின் உயர்மட்ட குழுவில் இருப்பவர் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் பாண்டுரங்கன். தீபா பேரவை சார்பில் வேலூர் மாவட்டத்தில் புதிதாக அறிவிக்கப்பட்ட மாவட்ட நிர்வாகிகள் நேற்று பாண்டுரங்கன் தலைமையில் பெரியார், அண்ணா, எம்ஜிஆர் ஆகிய தலைவர்கள் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த ஊர்வலமாக சென்றனர்.
 
காலை 10 மணிக்கு தொடங்கிய இந்த ஊர்வலத்தை தடுத்த காவல்துறை அதற்கான அனுமதியையும் ரத்து செய்து முன்னாள் அமைச்சர் பாண்டுரங்கன் உள்ளிட்ட நிர்வாகிகளை கைது செய்தனர்.
 
இதற்கு ஜெ.தீபா கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், பெரியார், அண்ணா, எம்ஜிஆர் சிலைகளுக்கு மாலை அணிவிப்பது தேச விரோதமா? அதிமுக ஜெ.தீபா அணி தொண்டர்களை அரசு மிரட்டி பார்க்கிறதா? எனது தலைமையிலான தொண்டர்கள் இந்த அடக்குமுறைக்கு அஞ்சமாட்டார்கள்.
 
தொடர்ந்து அராஜகமான முறையில் தடை விதித்தால் அத்தடையை மீறுவோம். எனது தலைமையில் வேலூரில் தடையை மீறி தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சியை நடத்திக் காட்டுவேன் என கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழக அரசு எப்பொழுதும் உண்மையை ஒப்புகொள்வதில்லை: சித்தராமைய்யா!!