அரபிக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்.. புயலாக மாறுமா?

Siva
திங்கள், 20 அக்டோபர் 2025 (10:45 IST)
தென்கிழக்கு அரபிக்கடலில் தற்போது நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, அடுத்த 24 மணி நேரத்திற்குள் மேலும் வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
 
இந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக மாறுமா என்பது குறித்து அடுத்தடுத்த நாட்களில் ஏற்படும் வானிலை மாற்றங்களை வைத்தே தெரியவரும் என்றும் கூறப்பட்டுள்ளது.
 
தென்தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக் கடல் பகுதிகளில் மணிக்கு 55 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
 
கடல் சீற்றத்தின் காரணமாக, ஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென்றுள்ள மீனவர்கள் அக்டோபர் 21-ஆம் தேதிக்குள் பாதுகாப்பாகக் கரை திரும்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தவெக மெளனமாக இருப்பது ஏன்? தவெக நிர்வாகி கருத்து..!

பாமக நடத்தும் போராட்டத்தில் கலந்து கொள்ளுங்கள்.. தவெகவுக்கு நேரில் சென்று அழைப்பு..!

விஜய்யை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி.. தவெக தீர்மானம்..!

எதிர்பார்த்தபடியே SIR படிவம் சமர்பிக்க அவகாசம் நீட்டிப்பு! எத்தனை நாட்கள்?

ரயிலில் பிச்சை எடுத்த பெண்ணை விட்டுக்கு அழைத்து சென்ற இளைஞர்.. பெற்றோர் சம்மதத்துடன் திருமணம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments