தமிழகத்தில் சில நாட்களாக கொரொனா இரண்டாம் அலையின் தொற்றுக் குறைந்து வருகிறது. தற்போது சில தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளது.
இந்நிலையில் மேலும் ஒருவாரம் (ஜூன் 21 வரை) தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் தமிழக அரசின் கட்டமைப்பு முழு பலத்துடன் உள்ளதாகவும் கொரொனா 3 அலை வந்தாலும் அதை எதிர்கொள்ள அரசு தயார் நிலையில் உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியம் சென்னையில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்துள்ளார்.
மேலும், தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலைத் தொற்று குறைந்துவருவதாகவும் தற்போது தமிழக்த்தில் 50 ஆயிரம் படுக்கைகள் காலியாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் சுப்பிரமணியம் கூறியுள்ளது மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.