Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

திமுக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படுவதையொட்டி கருணாநிதி நினைவிடத்தில் அலங்காரம்

திமுக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படுவதையொட்டி கருணாநிதி நினைவிடத்தில் அலங்காரம்
, வெள்ளி, 12 மார்ச் 2021 (10:52 IST)
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அரசியல் கட்சிகள் தங்களது தேர்தல் பிரச்சாரத்திற்கு மத்தியில் கூட்டணி கட்சிகளையும் அவற்றிற்கான தொகுதிகளை ஒதுக்கும் பணிகளையும் வேக வேகமாக நடத்தி முடித்தது.  
 
அதன்படி, திமுக தனது கூட்டணியில் 12 கட்சிகளை இணைத்துக்கொண்டுள்ளது. திமுக - 174, காங்கிரஸ் - 25, சி.பி.எம் - 6, சிபிஐ - 6, விசிக - 6, மதிமுக - 6, ஐ.யூ.எம்.எல் - 3, கொ.ம.தே.க - 3, மமக - 2, த.வா.க - 1, ஆ.த.பேரவை - 1, ம.வி.க - 1 என தொகுதிகள் பிரிக்கப்பட்டுள்ளது.  
 
தனிப்பெரும்பான்மைக்கு 118 இடங்கள் தேவையான நிலையில் திமுக அதனை விட கூடுதலாக 56 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இது திமுகவின் வியூகமாகவே பார்க்கப்படுகிறது. இந்நிலையில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியிடப்பட உள்ள நிலையில் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதி நினைவிடம் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாஜகவுக்கு தளம் அமைக்கவுமில்லை; அமமுகவை இணைக்கவுமில்லை! – எடப்பாடியார் திட்டவட்டம்!