Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அரசு அலுவலர்கள், ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

MK Stalin
, புதன், 17 மே 2023 (11:56 IST)
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 38 சதவீதமாக இருந்த அகவிலைப்படி 42 சதவீதமாக உயர்த்தப்படும் என்றும் இது ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என்றும் முதலமைச்சர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்த அகவிலைப்படி உயர்வு மூலம் சுமார் 16 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
முதலமைச்சர் முக ஸ்டாலின் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில் அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு போய் சேர்க்கும் பணியில் தங்களை அர்ப்பணித்து செயல்படும் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் பங்கினை முழுமையாக உணர்ந்து உள்ள இந்த அரசு அவர்களை நலனை தொடர்ந்து பாதுகாத்து வருகின்றது.
 
இந்த அரசு பொறுப்பேற்ற நாளிலிருந்து கடந்த அரசு விட்டுச் சென்ற கடும் நிதி நெருக்கடி மற்றும் கடன் சுமை கோவில் பெருந்தொற்றால் ஏற்பட்ட வருவாய் இழப்பு ஆகியவற்றிற்கு இடையே அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் பல்வேறு கோரிக்கைகளை படிப்படியாக நிறைவேற்றி வருகிறது.
 
அந்த வகையில் தற்போது அகவிலைப்படி உயர்வு குறித்த கோரிக்கையை கனிவுடன் பரிசீலனை செய்து இந்த உயர்வினை ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் செயல்படுத்திட உத்தரவிடப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வாக்கிங் சென்ற பெண்ணிடம் செயினை பறிக்க முயன்ற இருவர் சிறையில் அடைப்பு!