Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெயலலிதா அம்மா, மோடி அப்பா என்றால் என்ன உறவுமுறை? தயாநிதி மாறனின் சர்ச்சை பேச்சு

Webdunia
செவ்வாய், 30 மார்ச் 2021 (08:55 IST)
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் ஆ ராசா பேசியதாக எழுந்த குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது என்பதும் இந்த பரபரப்பு முடியும் முன்னரே தயாநிதிமாறன் மீண்டும் ஒரு சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்துள்ளதால் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது
 
கிணத்துக்கடவு தொகுதி திமுக வேட்பாளர் குறித்து பிரபாகரன் என்பவரை ஆதரித்து தயாநிதி மாறன் எம்பி நேற்று பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஜெயலலிதா எங்களுக்கு அம்மா என்றும், மோடி எங்களுக்கு அப்பா என்றும் கூறுகிறார். அப்படி என்றால் என்ன உறவுமுறை என்று நீங்களே பாருங்கள். இதை நாம் சொன்னால் தவறு என்பார்கள் என்று தயாநிதி மாறன் கூறியுள்ளார்
 
பொதுவாக பெண் தலைவர்களாக இருந்தால் அம்மா என்றும் ஆண் தலைவர்களாக இருந்தால் அப்பா என்றும் அழைக்கப்பட்டு வரும் நிலையில் இந்த அழைப்பை உறவு முறையுடன் சம்பந்தப்படுத்தி கொச்சைப்படுத்தியுள்ளார் தயாநிதிமாறன் என்று அதிமுகவினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர் 
 
ஆ ராசாவின் பிரச்சனை தற்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக முடிவுக்கு வரும் நிலையில் தற்போது தயாநிதி மாறனின் சர்ச்சை பேச்சால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

1967, 1977 போல் 2026ல் புதிய கட்சி தான் தமிழகத்தில் ஆட்சிக்கு வரும்: விஜய்

அமெரிக்காவின் ஹவாய் தீவை தாக்கியது சுனாமி.. அலறியடித்து ஓடிய மக்கள்.. 3 மணி நேரம் சோதனையான நேரம்..!

நிலநடுக்கம், சுனாமியை ஏற்படுத்தியது ரஷ்யாவா? அமெரிக்கா டார்கெட்டா? - பகீர் கிளப்பும் சதிக்கோட்பாடுகள்!

ஜெயலலிதாவின் முடிவு வரலாற்று பிழை! சர்ச்சை பேச்சு குறித்து கடம்பூர் ராஜூ விளக்கம்!

இன்றும் நாளையும் 4 டிகிரி வெப்பம் அதிகரிக்கும்.. ஆகஸ்ட் 2 முதல் கனமழை: வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments