சூடுபிடிக்கும் இடைத்தேர்தல்: விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளுக்கு தேர்தல் தேதி அறிவிப்பு

Webdunia
சனி, 21 செப்டம்பர் 2019 (12:53 IST)
தமிழக சட்டசபை தொகுதிகளான விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி தொகுதிகளுக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டசபை தொகுதியான நாங்குநேரியில் காங்கிரஸ் கட்சி வசந்தகுமார் எம்.எல்.ஏவாக இருந்து வந்தார். தற்போது கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் போட்டியிட்டு அவர் வெற்றிபெற்று விட்டதால் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார். அதனால் நாங்குநேரி தொகுதி காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. அதேபோல விக்கிரவாண்டி அதிமுக எம்.எல்.ஏ இறந்துவிட்டப்படியால் அந்த தொகுதியும் காலியானதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இரு தொகுதிகளுக்குமான இடைத்தேர்தல் அக்டோபர் 21ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கான மனுதாக்கல் செப்டம்பர் 23 தொடங்கி 30ம் தேதி வரை நடைபெறும். மனு மீதான் பரிசீலனைகள் அக்டோபர் 1ம் தேதியும், மனுவை திரும்ப பெறுவதற்கு அக்டோபர் 3ம் தேதியும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் 21ல் நடக்கும் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை பணிகள் அக்டோபர் 24ல் நடைபெறும். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டதால் அரசியல் கட்சி அலுவலகங்கள் பரபரப்புடன் காணப்படுகின்றன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இம்ரான் கானை அரசியல் கைதியாக ஏற்கிறதா இந்தியா? பாகிஸ்தான் ஊடகம் பரப்பிய தகவல்..!

திருப்பரங்குன்றம் மலை தீபம் சர்ச்சை: தர்கா அருகே தீபம் ஏற்றும் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு!

விஜயின் ரோட் ஷோவுக்கு புதுச்சேரி காவல்துறை அனுமதி மறுப்பு!...

20 நிமிடங்களில் முறிந்த திருமணம்: மணமகள் மறுத்ததால் ஊர் பஞ்சாயத்தில் விவாகரத்து!

பாஜக வேட்பாளராக போட்டியிடும் சோனியா காந்தி.. தமிழில் அடித்த போஸ்டரால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments