Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் உள்ள துறைமுகங்களில் 3 ஆம் எண் புயல் எச்சரிக்கை!

Webdunia
திங்கள், 24 மே 2021 (10:27 IST)
யாஸ் புயல் காரணமாக தமிழகத்தில் உள்ள துறைமுகங்களில் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

 
வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் அதனைத் தொடர்ந்து இன்று புயலாகவும் வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. அதன்படி, யாஸ் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் இன்று உருவாகி வலுப்பெற்றுள்ளது.  
 
மேற்கு வங்கம் மற்றும் வடக்கு ஒடிசா கடற்கரை பகுதியில் 26 ஆம் தேதி கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. அப்போது மணிக்கு 155 முதல் 165 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
புயல் காரணமாக அடுத்த இரண்டு நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டு உள்ளது. அதோடு, தமிழகத்தில் உள்ள துறைமுகங்களில் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. ஆம், சென்னை, நாகை, கடலூர் துறைமுகங்களில் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை: முன்னாள் முதல்வர் மகன் திடீர் பாதயாத்திரை..!

சீமானின் கடுமையான விமர்சனம்.. பதிலடி கொடுக்க திட்டம்.. நாளை தவெக அவசர ஆலோசனை..!

44 ஆண்டுகளாக காங்கிரஸில் இருந்தவர்.. பாஜகவில் இணைந்தவுடன் பதவி..!

கேரளாவில் ரயில் விபத்து.. 4 தமிழக தூய்மை பணியாளர்கள் பரிதாப மரணம்..!

இறக்குமதி ஐட்டம்: ஷைனாவிடம் மன்னிப்பு கேட்ட உத்தவ் சிவசேனா எம்.பி

அடுத்த கட்டுரையில்
Show comments