வேலையில்லா பட்டதாரிகளை குறிவைத்து, அவர்களை கோச்சிங் சென்டர்களில் பயிற்சி பெற வைத்து அதன் பின் சைபர் குற்றவாளியாக மாற்றுகின்றனர் என கைதான ஒருவர் காவல்துறையிடம் வாக்குமூலம் அளித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் திருப்பூரை சேர்ந்த ஜவுளி வர்த்தகர் ஒருவரிடம் டிஜிட்டல் மோசடி செய்து ஒரு கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், "வேலை தேடும் பட்டதாரிகளை சைபர் குற்றவாளிகளாக மாற்ற வலை விரித்தோம். அவர்களுக்கு போதிய திறமை இல்லாததால் கோச்சிங் சென்டர் நடத்தி, சைபர் குற்றங்களை செய்ய வேண்டும் என்று பயிற்சி கொடுத்தோம்," என்றும் கூறியுள்ளார்.
"எங்களைப் போன்ற பலர் கோச்சிங் சென்டர் நடத்தி, அவற்றில் பயிற்சி பெற்றவர்களுக்கு உடனடி வேலை வாய்ப்புகள் கொடுக்கின்றனர். இதனால் பட்டதாரிகள் அதிக அளவில் சைபர் குற்றவாளிகளாக மாறுகிறார்கள். அவர்களுக்கு ஒரு லட்ச ரூபாய் வருமானத்துடன் சைபர் குற்றங்களை செய்ய வைத்தோம்," என அந்த நபர் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
நீட் போன்ற தேர்வுகளுக்கு மட்டும் அல்லாமல், சைபர் குற்றம் செய்வதற்கும் கோச்சிங் சென்டர்?" என இந்த தகவலை அறிந்த பொதுமக்கள் அதிர்ச்சியை வெளியிட்டுள்ளனர்.