தமிழகத்தில் உள்ள பள்ளி மாணவர்களின் தகவல் திருடு போனது குறித்த விவகாரத்தில் மூன்று பிரிவுகளின் கீழ் சென்னை மத்திய சைபர் க்ரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சமீபத்தில் வெளியான ஆடியோ ஒன்றில் 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு மாணவர்களின் செல்போன் எண் உள்ளிட்ட பள்ளி மாணவர்களின் தகவல்கள் பள்ளிக்கல்வித்துறையின் இணையதளத்தில் இருந்து திருடி விற்பனை செய்வதாக கூறப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஒரு மாவட்ட பள்ளி மாணவர்களின் தகவல்கள் ரூ.3000 முதல் 5000 வரை விற்பனை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த விவகாரம் பெறும் பரபரப்பு ஏற்படுத்திய நிலையில் இது குறித்து மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
இந்த விசாரணையின் முடிவில் பள்ளி மாணவர்களின் தகவல்களை விற்பனை செய்தது யார் என்பது தெரியவரும்.