Publish Date: Sat, 05 Feb 2022 (21:23 IST)
Updated Date: Sat, 05 Feb 2022 (21:26 IST)
தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் இன்று மேலும் 7,524 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனாவால் இன்று பாதிக்கப்பட்டவர்களின் விவரம் பின்வறுமாறு:
தமிழகத்தில் இன்று மேலும் 7,524 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 34,04, 762 பேராக அதிகரித்துள்ளது.
இன்று தமிழகத்தில் கொரோனாவிலிருந்து 23, 938 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 32, 28, 151 ஆக அதிகரித்துள்ளது.
இன்று கொரொனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 37 ஆகும், இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 37, 733 ஆக அதிகரித்துள்ளது.
மேலும், சென்னையில் இன்று 1223 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்த எண்ணிக்கை 7,41,216 பேராக அதிகரித்துள்ளது.
தற்போது, 1,38,878 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.