தமிழகத்தில் கொரோனா தடுப்பு விதிகளை மீறியோரிடம் இருந்து 14 கோடியே 59 லட்ச ரூபாய் அபராதம் வசூல்.
கடந்த சில மாதங்களாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. கொரோனா பாதிப்புகள் காரணமாக தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. எனினும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன.
இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா தடுப்பு விதிகளை மீறியோரிடம் இருந்து 14 கோடியே 59 லட்ச ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமூக இடைவெளியை கடைப்பிடிக்காதது, முகக்கவசம் அணியாதது போன்ற காரணத்திற்காக அபராதம் வசூலிக்கப்பட்டுகிறது.
இதில் நேற்று ஒரு நாள் மட்டும் மேல் கூறப்பட்ட காரணங்களுக்காக மொத்தம் 8,525 பேரிடம் ரூ.18,34,150 வசூலிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னையில் அதிகபட்சமாக ரூ.2,68,57,400 அபராத தொகை இதுவரை வசூலிக்கப்பட்டுள்ளது.