அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற தனி அமைப்பை தினகரன் துவங்கினார். இதில் தனக்கு உடன்பாடு இல்லாத காரணத்தால் நாஞ்சில் சம்பத் இதில் இருந்து விலகுவதாக தெரிவித்தார்.
மேலும், அண்ணா மற்றும் திராவிடத்தை ஒதுக்கி தினகரன் அமைப்பை நடத்தலாம் என நினைக்கிறார். அண்ணாவும் திராவிடமும் இன்றி என்னால் செயல்பட முடியாது எனவே இந்த அமைப்பை விட்டு விலகுவதோடு, அரசியலை விட்டே விலகுகிறேன் என தெரிவித்துள்ளார்.
நாஞ்சில் சம்பத் விலகல் குறித்தும் தினகரன் அமைப்பின் பெயரில் ஏன் திராவிடம் இல்லை என்பது குறித்தும் சி.ஆர்.சரஸ்வதி விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது, நாஞ்சில் சம்பத் ஏன் அதிருப்தியடைந்தார் என்பது எங்களுக்கு தெரியவில்லை. இதற்கு முன்பு ஜெயலலிதா எடுத்த முடிவுக்கு யாராவது எதிர்ப்பு தெரிவித்துள்ளார்களா? தலைமை எந்த முடிவை எடுத்தாலும் அதற்கு உடன்பட வேண்டும்.
ஜெயலலிதா ஒரு திராவிட தலைவி. ஜெயலலிதா ஒரு திராவிட தலைவியாக வாழ்ந்தவர். அம்மா என்ற சொல்லே திராவிடத்தையும் குறிக்கும் என்பதால் திராவிடர் என்ற சொல்லை கட்சியில் சேர்க்க வேண்டிய தேவை எழவில்லை என விளக்கம் அளித்துள்ளார்.