Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

போக்குவரத்துத் துறையை தனியார்மயப் படுத்த திட்டமா ? – மார்க்சிஸ்ட் கட்சி கண்டனம் !

போக்குவரத்துத் துறையை தனியார்மயப் படுத்த திட்டமா ? – மார்க்சிஸ்ட் கட்சி கண்டனம் !
, புதன், 9 அக்டோபர் 2019 (15:16 IST)
தமிழக அரசு போக்குவரத்துத் துறையை தனியார்வசம் ஒப்படைக்க இருப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

பொதுப் போக்குவரத்துக்காக தமிழக அரசு கடந்த சில வாரங்களுக்கு முன்பாக சுற்றுசூழலுக்கு கேடில்லாத மின்சாரப் பேருந்துகளை அறிமுகப்படுத்துவதாக அறிவித்தது. இந்நிலையில் அந்த பேருந்துகள் தமிழக போக்குவரத்துத் துறையின் கீழ் வராது என கூறியிருப்பதாகவும் அதற்குக் கண்டனம் தெரிவித்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அக்கட்சியின் மின்சாரப் பேருந்துகள் கே பாலகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கையில் ‘அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் 525 மின்சாரப் பேருந்துகளை இயக்கப் போவதாக மாநில அரசு அறிவித்துள்ளது. மின்சாரப் பேருந்துகள் போன்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த உயர் தொழில்நுட்பங்கள் வரவேற்கத்தக்கது.

ஆனால், மாநில அரசு இந்த பேருந்துகளை தனியாரிடம் இருந்து வாடகைக்கு பெறுவதாகவும், ஓட்டுநர் மற்றும் தொழில்நுட்ப பணிகள் அந்த தனியாரே பார்த்துக் கொள்வார் என்றும், நடத்துநர் மட்டுமே போக்குவரத்துக் கழகத்தைச் சேர்ந்தவராக இருப்பார் என்றும் அறிவித்துள்ளது. இது தனியார்மயத்திற்கான கால்கோல் விழாதான் என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அழுத்தமாக சுட்டிக்காட்டுகிறது.

ஏற்கனவே ஜெயலலிதா அவர்கள் 2002ம் ஆண்டு போக்குவரத்துக் கழகங்களை தனியார்மயப்படுத்தும் அறிவிப்பை வெளியிட்டு, கடும் எதிர்ப்பிற்கு பிறகு திரும்பப் பெற்றார். அதிமுக, திமுக இரண்டு அரசுகளுமே தொடர்ந்து போக்குவரத்துத்துறை லாபத்திற்காக நடத்தப்படவில்லை என்றும், இதை தனியார்மயமாக்கும் எண்ணமே இல்லை என்றும் சட்டமன்றத்திலேயே சத்தியம் செய்துள்ளன.

இப்போதைய இந்த நடவடிக்கை அதிமுக அரசு போக்குவரத்துத்துறையை பொதுத்துறையாக நீடிக்கும் முடிவைக் கைவிட்டதையே குறிக்கிறது. இது வன்மையான கண்டனத்திற்குரியது.

தமிழகத்தின் ஏழை, எளிய மற்றும் கிராமப்புற மக்களின் தொழிலுக்கும், பொருளாதார செயல்பாட்டிற்கும் பேருதவியாக இருக்கிற போக்குவரத்துக் கழகங்களை தனியார்மயமாக்கும் எந்த முயற்சியையும் மாநில அரசு எடுக்கக் கூடாது என்றும், மின்சாரப் பேருந்துகளை மாநில அரசே இயக்க வேண்டும் என்றும், தொழிலாளர் வேலைவாய்ப்புகளைப் பறிக்கக் கூடாது’ எனவும் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிசிடிவியை பார்த்ததும் தெறித்து ஓடிய கொள்ளையன் – வைரல் வீடியோ!