Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கோடி கோடியாய் பணம்? கண்டெய்னரை மறித்த பொதுமக்கள்... கோவையில் பரபரப்பு

Advertiesment
கோடி கோடியாய் பணம்? கண்டெய்னரை மறித்த பொதுமக்கள்... கோவையில் பரபரப்பு
, செவ்வாய், 9 ஏப்ரல் 2019 (08:32 IST)
கோவை உக்கடத்தில் கண்டெய்னர் லாரியை வழிமறித்த பொதுமக்கள் அதில் கோடி கோடியாய் பணம் இருப்பதாக கூறி அதனை சிறைபிடித்தனர்.
2016 தமிழக சட்டசபை தேர்தலின் போது திருப்பூர் அருகே மூன்று கண்டெய்னர் லாரி பணத்துடன் சிக்கியது. அதில் 570 கோடி ரூபாய் பணம் இருந்தது தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
 
நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற இடத்தேர்தலை முன்னிட்டு தமிழகமெங்கும் வருமான வரித்துறையினர் மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு கோடிக்கணக்கான பணத்தை பறிமுதல் செய்து வருகின்றனர்.
 
இந்நிலையில் கோவை உக்கடத்தில் நேற்று இரவு கண்டெய்னர் லாரி ஒன்றை மறித்த மக்கள் அதில் கோடி கோடியாய் பணம் இருப்பதாக கூறி லாரியை சிறை பிடித்த்னர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் தேர்தல் பறக்கும் படைக்கு தகவல் கொடுத்தனர். அந்த கண்டெய்னர் லாரியை சோதனை செய்ததில் அதில் டீ தூள் இருந்தது தெரிய வந்தது.  திடீரென பரவிய வதந்தியால் அப்பகுதியே சற்று நேரம் உச்சகட்ட பரபரப்பானது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கி.வீரமணியின் கார் கண்ணாடி உடைப்பு: திருப்பூரில் பரபரப்பு