Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தேனி தொகுதி வெற்றி – ரவிந்தரநாத் மனுத்தாக்கல் மீதான தீர்ப்பு இன்று!

Advertiesment
தேனி தொகுதி வெற்றி – ரவிந்தரநாத் மனுத்தாக்கல் மீதான தீர்ப்பு இன்று!
, வெள்ளி, 16 அக்டோபர் 2020 (10:45 IST)
தேனி தொகுதியின் மக்களவைத் தொகுதி வேட்பாளராக வெற்றி பெற்ற ஓ பி ரவீந்தரநாத்தின் வெற்றி செல்லாது என அறிவிக்க வேண்டும் என வழக்கு தொடுக்கப்பட்டது.

தேனி தொகுதியில் அதிமுக சார்பாக வெற்றி பெற்ற ஓ பி ரவீந்தரநாத் 76 ஆயிரத்து 319 ஓட்டுகள் அதிகம் பெற்று வெற்றிப் பெற்றார். இப்போது அதிமுகவின் ஒரே மக்களவை உறுப்பினராக இருந்து வருகிறார். இவர் வாக்குக்காக பணம் கொடுத்ததாகவும் அதனால் அவரின் வெற்றி செல்லாது என அறிவிக்க வேண்டும் எனவும் கூறி தேனி மக்களவை தொகுதி வாக்காளர் மிலானி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில் தனக்கு எதிரான தேர்தல் வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல என்பதால், அதை தள்ளுபடி செய்ய வேண்டும் என ஓ பி ரவீந்தரநாத் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் அந்த மனு மீதான தீர்ப்பை நீதிமன்றம் இன்று அறிவிக்கவுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாக பொதுக்குழு கூட்டம் – சென்னையில் தொடங்கியது!