Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வீட்டில் வைத்திருந்த 4 யானைத் தந்தங்கள் – மோகன் லாலுக்கு வந்த சிக்கல் !

Webdunia
ஞாயிறு, 27 அக்டோபர் 2019 (07:50 IST)
வீட்டில் நான்கு யானைத் தந்தங்களை வைத்திருந்த வழக்கில் நடிகர் மோகன்லாலுக்கு வனத்துறை மூலம் சிக்கல் எழுந்துள்ளது.

மலையாள சூப்பர் ஸ்டாரான மோகன்லால் வீட்டில் ஏழு வருடங்களுக்கு முன்னர் வருமான வரிசோதனையில் அவரிடம் இருந்து 4 யானைத் தந்தங்கள் கைப்பற்றப்பட்டன. இது தொடர்பாக மோகன் லால் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. வனத்துறை சட்டப்படி யானைத் தந்தங்களை வீட்டில் வைத்திருக்கக் கூடாது.

ஆனால் அப்போதைய வனத் துறை அமைச்சர் ராதாகிருஷ்ணன் சட்டத்தில் சில திருத்தங்களை செய்து தந்தங்களை மோகன் லாலிடமே திருப்பி கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் ஏழு வருடங்களுக்குப் பிறகு கொடநாடு வனத் துறையினர் பெரும்பாவூர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

இதையடுத்து மோகன்லால் தரப்பில் குற்றப்பத்திரிக்கையை ரத்து செய்யக்கோரி கேரள உயர் நீதிமன்றத்தில் மோகன் லால் மனுத் தாக்கல் செய்துள்ளார். அவரது மனுவில் ‘தந்தங்கள் வைத்துக்கொள்ள என்னிடம் லைசென்ஸ் உள்ளது’ எனத் தெரிவித்துள்ளார். இந்நிலையில் பெரும்பாவூர் நீதிமன்றம் டிசம்பர் 6ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு மோகன் லாலுக்கு சம்மன் அனுப்ப உத்தரவிட்டு உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இது நமக்கு கட்டுப்படியாகாது.. அமெரிக்க ஏற்றுமதியை நிறுத்திய லேண்ட் ரோவர்! - அடுத்து டாட்டா காட்டப்போகும் TATA!

இலங்கை சென்ற பிரதமர் மீனவர் பிரச்சனைக்கு எந்த தீர்வும் காணவில்லை: முதல்வர் ஸ்டாலின்..!

வாணியம்பாடி பள்ளி காவலாளி ஓட ஓட குத்தி கொலை.. விடுமுறை அறிவிப்பு..!

இந்தியா உள்பட 14 நாடுகளுக்கு விசா தடை விதித்த சவுதி அரேபியா: என்ன காரணம்?

அமைச்சர் நேரு மகன், சகோதரர் வீட்டில் சோதனை.. அமலாக்கத்துறை அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments