Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அதிமுக எம் எல் ஏ திருமண சர்ச்சை – மனைவியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவு!

அதிமுக எம் எல் ஏ திருமண சர்ச்சை – மனைவியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவு!
, வியாழன், 8 அக்டோபர் 2020 (12:25 IST)
சில தினங்களுக்கு முன்னர் சாதி மறுப்புத்திருமணம் செய்துகொண்ட கள்ளக்குறிச்சி எம் எல் ஏ பிரபு தன் மனைவியை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் பிரபு. இவர் அதிமுக கட்சிக்காக போட்டியிட்டு 2016 ஆம் அனடு சட்டமன்ற உறுப்பினரானார். இந்நிலையில் இவர் இப்போது கல்லூரி மாணவி ஒருவரை சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்டுள்ளார். இந்த திருமணத்தை பிரபுவின் பெற்றோரே தலைமையேற்று மிகவும் எளிமையான முறையில் நடத்தி வைத்தனர். விரைவில் முதல்வரை சந்தித்து தங்கள் திருமணத்துக்காக வாழ்த்துகளைப் பெற உள்ளாராம் பிரபு.

சாதி மறுத்து திருமணம் செய்து கொள்பவர்களை பெற்றோர்களே ஆணவக் கொலை செய்யும் இந்த நேரத்தில் ஒரு சட்டமன்ற உறுப்பினரே முன்மாதிரியாக் இதுபோல திருமணம் செய்து கொண்டு இருப்பது பலரது பாராட்டுகளையும் பெற்று வருகிறது. இந்நிலையில் பெண்ணின் தந்தை பிரபு வீட்டுக்கு முன்னர் தற்கொலைக்கு முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளாவது ‘நான் சாதி மத பேதம் பார்ப்பவன் இல்லை. என் மகளுக்கும் பிரபுவுக்கும் 20 வயது வித்தியாசம். 20 வயசு வித்தியாசத்தை எப்படி ஏத்துக்கறது? அதனால்தான் பெட்ரோலை ஊற்றிக்கிட்டு தற்கொலைக்கு முயன்றேன்.’ எனக் கூறியுள்ளார்.

ஆனால் எம் எல் ஏ பிரபுவோ பெண்ணின் சம்மதத்துடன் அவரை திருமணம் செய்துகொண்டதாகவும், அவரை மயக்கி திருமணம் செய்யவில்லை என்றும் கூறியுள்ளார். இது சம்மந்தமாக அந்த பெண்ணும் தன்னை யாரும் கடத்தவில்லை என வீடியோ வெளியிட்டு இருந்தார். மேலும் பெண்ணின் தந்தைக்கு எந்த மிரட்டலும் விடவில்லை எனக் கூறியுள்ளார். இந்நிலையில் எம் எல் ஏ பிரபு தன் மனைவியை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தவேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழகத்தில் திமுக தேறாது... ஜெயகுமார் விமர்சனம்!