சொத்து குவிப்பு வழக்கில் இருந்து திமுக அமைச்சர் விடுவிப்பு

Webdunia
செவ்வாய், 13 டிசம்பர் 2022 (13:33 IST)
சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து திமுக அமைச்சர் மற்றும் அவரது மனைவி விடுவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
கடந்த 2006 முதல் 2011 ஆம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சி காலத்தில் பள்ளி கல்வித்துறை அமைச்சராக இருந்த தங்கம் தென்னரசு மற்றும் அவரது மனைவி மணிமேகலை ஆகியோர் மீது ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் சொத்துக் குவிப்பு வழக்கு தொடரப்பட்டது. 
 
இந்த வழக்கில் இருந்து தங்களை விடுவிக்க கோரி அமைச்சர் தங்கம் தென்னரசு மனு தாக்கல் செய்திருந்த நிலையில் இந்த வழக்கிலிருந்து அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் அவரது மனைவி மணிமேகலை ஆகியோர் விடுவிக்கப்படுவதாக நீதிபதி அறிவித்துள்ளார். 
 
அரசியல் காரணங்களுக்காக கடந்த அதிமுக ஆட்சியில் அவதூறு வழக்கு பதிவு செய்யப்பட்டது என்றும் எனவே என்னையும் எனது மனைவியையும் சொத்து குவிப்பு வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் என்றும் தெரிவித்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நவம்பர் 27-ல் வங்கக் கடலில் மேலும் ஒரு தாழ்வு மண்டலம்! இந்திய வானிலை ஆய்வு மையம்

சீமான்தான் நம்பர் ஒன்!.. டிஜிட்டல் சர்வே மூலம் கிடைத்த ரிசல்ட்!..

வாக்காளர் பட்டியல் SIR படிவத்தை நிரப்ப ஏஐ தொழில்நுட்பம்: புதிய முயற்சி!

40 ஆண்டு அரசியல்.. 10 முறை முதல்வர்.. நிதிஷ்குமாரின் சொத்து மதிப்பு ரூ.1.64 கோடி, 13 பசுக்கள் தானா?

உலகிலேயே கஷ்டமில்லாத பணி கவர்னர் பணி.. கனிமொழி எம்பி கிண்டல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments