Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கிணறு வெட்ட பூதம் – டாஸ்மாக் கடைகளுக்கு இன்று லீவ் ?

கிணறு வெட்ட பூதம் – டாஸ்மாக் கடைகளுக்கு இன்று லீவ் ?
, புதன், 30 ஜனவரி 2019 (08:29 IST)
தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளை இன்று முழுவதும் மூடவேண்டும் எனத் தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

கிணறு வெட்ட பூதம் தோன்றியது போல எதற்கோ வழக்குப் போட்டால் எதுவோ நடந்துள்ளது. கன்னியாகுமரியைச் சேர்ந்த ரதீஷ் என்பவர் தங்கள் பகுதியான விளவங்காடு குடியிருப்ப்புப் பகுதிக்குள் உள்ள டாஸ்மாக் கடையினை மூடவேண்டும் என சென்னை உயர்நீதி மன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்தார்.

அந்த மனு மீதான விசாரணை நேற்று  விசாரணைக்கு வந்தது. வழக்கின் எதிர் மனுதாரராக  மதுவிலக்கு ஆயப்பிரிவைச் சேர்த்த நீதிபதிகள் சம்மந்தப்பட்ட டாஸ்மாக் கடையை அகற்றுவது தொடர்பாக, கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க வேண்டும் என்று கூறி, இவ்வழக்கின் விசாரணையை பிப்ரவரி 18ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
webdunia

அதனையடுத்து நாளை (இன்று- ஜனவரி 30 ) காந்தியடிகளின் நினைவு நாளை ஒட்டி தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளனர். எப்போதும் காந்தி ஜெயந்தியான அக்டோபர் 2 ஆம் நாள்தான் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறைஅளிக்கப்படும். ஆனால் இந்த் ஆண்டு அவரது நினைவு நாளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இது இந்த ஆண்டுக்கு மட்டுமா அல்லது இனிவரும் ஆண்டுகளில் இது தொடருமா என்ற விவரங்களை நீதிபதிகள் குறிப்பிடவில்லை.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

குரு பிறந்த நாள் – அஞ்சலி செலுத்த பாமகவுக்கு தடை !