Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீலகிரி டி23 புலியை கொல்ல வேண்டாம்! – சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்!

Webdunia
செவ்வாய், 5 அக்டோபர் 2021 (12:35 IST)
நீலகிரியில் சுற்றி வரும் டி23 புலியை கொல்லாமல் பிடிக்க சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

நீலகிரி தேவன் எஸ்டேட் பகுதியில் மூன்று பேர் மற்றும் பசுமாடுகளை புலி ஒன்று கொன்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து அந்த புலியை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினர் முயற்சிகள் மேற்கொண்டனர்.

ஆனால் அனைத்திலும் தப்பிய புலி தேவன் எஸ்டேட்டிலிருந்து மசினக்குடி நோக்கி நகர்ந்ததுடன் அங்கு மாடு மேய்த்த ஒருவரையும் அடித்துக் கொன்றது. அதிகமான மனித பலிகள் ஏற்பட்டு வருவதால் புலியை தேவைப்பட்டால் சுட்டுபிடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது.

இதை எதிர்த்து விலங்குகள் நல ஆர்வலர்கள் தொடுத்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் விளக்கமளித்த தமிழக வனத்துறை புலியை சுட்டு பிடிக்கவோ, கொல்லவோ தங்களுக்கு உத்தரவிடப்படவில்லை என்றும், உயிருடன் பிடிக்கவே முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் நீதிமன்றமும் புலியை கொல்லாமல் பிடிக்க அறிவுறுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாராஷ்டிராவில் முட்டாள் அரசாங்கம் நடக்கிறது: ஆதித்ய தாக்கரே கடும் தாக்கு..!

இயக்குநர் பிருத்விராஜ் மனைவி ஒரு நகர்ப்புற நக்சல்: பாஜக குற்றச்சாட்டு..!

மோடிக்கு பின்னர் யோகி ஆதித்யநாத் தான் பிரதமரா? அவரே அளித்த தகவல்..!

விளம்பர ஷூட்டிங்கில் வந்து வசனம் பேசினால் மட்டும் போதாது: முதல்வருக்கு ஈபிஎஸ் கண்டனம்..!

சென்னையில் நாளை முதல் கூடைப்பந்து போட்டி.. 5 நாடுகளின் அணிகள் பங்கேற்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments