குக செல்வம் கட்சியில் இருந்து நீக்கிய விவகாரம்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Webdunia
வியாழன், 10 செப்டம்பர் 2020 (20:40 IST)
திமுகவில் இருந்து நீக்கியதை எதிர்த்து ஆயிரம் விளக்கு தொகுதி எம்எல்ஏ குட்கா செல்வம் தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்கும்படி திமுக தலைவர் மற்றும் பொதுச் செயலாளருக்கு சென்னை நகர உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது 
 
பாஜக தலைவர்களை சந்தித்ததால் சமீபத்தில் ஆயிரம் விளக்கு தொகுதியில் திமுக எம்எல்ஏ கு.க.செல்வம் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை நகர குற்றவியல் உரிமையியல் நீதிமன்றத்தில் குக செல்வம் வழக்கு தொடர்ந்தார்
 
இந்த மனுவில் கட்சியின் சட்டதிட்டத்தின்படி உறுப்பினரை கட்சியிலிருந்து நீக்க பொதுச்செயலாளருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது என்றும் தன்னை கட்சியில் இருந்து எந்த விசாரணையும் இல்லாமல் திமுக தலைவர் நீக்கி உள்ளதாகவும் தெரிவித்தார் 
 
ந்த நிலையில் இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது இது குறித்து பதில் அளிக்கும்படி திமுக தலைவர் மற்றும் திமுக பொதுச் செயலாளருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வரும் செப்டம்பர் 15-ஆம் தேதிக்குள் திமுக தலைவர் மற்றும் பொதுச்செயலாளர் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று வேலை நிறுத்தம் செய்தால் சம்பளம் கிடையாது.. அரசு ஊழியர்களுக்கு எச்சரிக்கை..!

SIR கணக்கெடுப்பு படிவங்களை அளிக்க இன்று கடைசி நாள்! 70 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா?

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தாமாகவே பதவி விலக வேண்டும்.. திருமாவளவன் வலியுறுத்தல்:

ஒரே மேடையில் 2 பெண்களுக்கு தாலி கட்டிய இளைஞர்: இருவருடனும் 10 வருடங்கள் வாழ்ந்து குழந்தை பெற்ற பின் திருமணம்..!

நிர்மலா சீதாராமன் 'டீப்ஃபேக்' வீடியோ: பெங்களூரு மூதாட்டியிடம் ரூ.33 லட்சம் மோசடி!

அடுத்த கட்டுரையில்
Show comments