Publish Date: Tue, 02 May 2023 (15:30 IST)
Updated Date: Tue, 02 May 2023 (15:32 IST)
ஒன்றுக்கும் மேற்பட்ட பாடங்களுக்கு மேல் 11ஆம் வகுப்பில் தோல்வி அடைந்த மாணவர்களுக்கு துணை தேர்வு வைக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 11 ஆம் வகுப்பில் ஒன்றுக்கு மேற்பட்ட பாடங்களில் தோல்வி அடைந்த மாணவர்களுக்கு துணைத்தேர்வு எழுத அனுமதிக்கப்படுவதில்லை என மாணவர்கள் தரப்பு வழக்கு தொடர்ந்தனர்
இந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது தமிழ்நாட்டில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 11ஆம் வகுப்பு தேர்வில் ஒன்றுக்கும் மேற்பட்ட பாடங்களில் தோல்வி அடைந்த மாணவர்களுக்கு மூன்று வாரங்களில் துணைத் தேர்வு நடத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற உத்தரவிட்டு உள்ளது. இதனை அடுத்து மாணவர்கள் இந்த உத்தரவால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்