நடிகை கஸ்தூரிக்கு நிபந்தனை ஜாமீன்: சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு

Mahendran
புதன், 20 நவம்பர் 2024 (18:38 IST)
நடிகை கஸ்தூரிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

தெலுங்கு பேசும் மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக நடிகை கஸ்தூரி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு ஹைதராபாத்தில் இருந்த அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார்.

அவரை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்ட நிலையில் அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் கஸ்தூரி ஜாமீன் கேட்டு சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ள நிலையில் அந்த மனுவில் தனக்கு சிறப்பு குழந்தை உள்ளதாகவும், சிங்கிள் மதர் என்பதால் ஜாமீன் வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனுவுக்கு போலீஸ் தரப்பில் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை என்பதை அடுத்து, கஸ்தூரிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

இதனையடுத்து இன்று அல்லது நாளை சிறையில் இருந்து அவர் விடுதலை செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டிவியை தூக்கி எறிந்துவிட்டு பின்னர் ஏன் திமுகவுடன் கூட்டணி? கமல் சொன்ன விளக்கம் யாருக்காவது புரிந்ததா?

இன்று முதல் நவம்பர் 22 வரை தமிழகத்தில் மழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

ரிமோட்லாம் தூக்கி போட்டு உடைச்சிட்டு ஏன் திமுக?.. கமல் புதிய விளக்கம்...

பெங்களூரை விட்டு வெளியேறினால் கோடிக்கணக்கில் சலுகை.. கர்நாடக அரசு அதிரடி அறிவிப்பு..!

உயிர் போகும்போதும் குழந்தைகளை காப்பாற்றிய ஆட்டோ ஓட்டுனர்!.. சென்னையில் சோகம்!..

அடுத்த கட்டுரையில்
Show comments