Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பணிப்பெண் சித்ரவதை வழக்கு: திமுக எம்எல்ஏ மகன், மருமகளுக்கு நிபந்தனை ஜாமீன்

Mahendran
வெள்ளி, 1 மார்ச் 2024 (14:37 IST)
திமுக எம்எல்ஏ மகன் வீட்டில் பணிப்பெண் சித்திரவதை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் எம்எல்ஏவின் மகன் மற்றும் மருமகள் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது அவர்களுக்கு நிபந்தனை ஜாமீன் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
பல்லாவரம் திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன் ஆண்டோ மதிவாணன் மற்றும் அவரது மனைவி மெர்லினா ஆகிய இருவரும் பணிப்பெண்ணை சித்திரவதை செய்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது அவர்களுக்கு நிபந்தனை ஜாமீன் அளிக்கப்பட்டுள்ளது
 
இரண்டு வாரங்களுக்கு நீலாங்கரை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தினமும் ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையுடன் சென்னை ஐகோர்ட் ஜாமீன் வழங்கி உள்ளது 
 
முன்னதாக ஜாமீன் மனுவை இருவரும் தாக்கல் செய்தபோது இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது பெற்றோர் இல்லாமல் தங்களது நான்கு வயது குழந்தை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதனால் ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர் 
 
இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதி ஜாமீன் வழங்க, பணிப்பெண் தரப்பில் இருந்து ஜாமீன் வழங்க  ஆட்சேபனை இல்லை என்று  தெரிவிக்கப்பட்ட நிலையில் ஜாமீன் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளை 10 மாவட்டங்களை வெளுக்க போகும் கனமழை! - வானிலை அலெர்ட்!

மகாராஷ்டிரா: மக்களவைத் தேர்தலில் சரிவு கண்ட பாஜக சட்டமன்ற தேர்தலில் வெற்றி - ஐந்தே மாதங்களில் என்ன நடந்தது?

57 ஆண்டுகளில் இல்லாத மோசமான தோல்வி.. எதிர்க்கட்சி தலைவர் இல்லாத மகாராஷ்டிரா..!

கனடா கண்ட மோசமான பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ.. கொதித்தெழுந்த மக்கள்..!

அமெரிக்க தேர்தலை விட இந்திய தேர்தல் மேலானது: எலான் மஸ்க்

அடுத்த கட்டுரையில்
Show comments