தீபாவளியை ஒட்டி அதிகாலை 2 மணி வரை ஜவுளிக்கடைகள்… ஆனால் ? – நீதிமன்றம் அனுமதி

Webdunia
சனி, 19 அக்டோபர் 2019 (08:32 IST)
மதுரையில் தீபாவளிப் பண்டிகையை ஒட்டி அதிகாலை இரண்டு மணி வரை ஜவுளிக்கடைகளைத் திறக்கலாம் என் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அனுமதி அளித்துள்ளது.

தீபாவளிப் பண்டிகைக்கு இன்னும் 8 நாட்களே உள்ள நிலையில் மக்கள் பண்டிகைக்கு தேவையானப் பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டத் தொடங்கிவிட்டனர். தீபாவளிக்கு வாங்கப்படும் முக்கியமான பொருட்களில் ஜவுளி வகைகளுக்கு முக்கிய இடமுண்டு.  இந்நிலையில் டெக்ஸ்டைல்ஸ் விற்பனையாளர் கூட்டமைப்பு சார்பில் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதில் ‘ துணிக்கடைக்காரர்கள் அனைவரும் வட்டிக்குக் கடன் வாங்கி தொழில் செய்து வருகின்றனர். தீபாவளி முந்தைய தின்ங்களில் தான் அதிகளவொல் வாடிக்கையாளர்கள் வருவார்கள். ஆனால் கடந்த ஆண்டு கடைகளை இரவில் அதிக நேரம் திறக்க அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் தீபாவளிக்கு முந்தைய இரு நாட்களும் கடைகளை அதிக நேரம் திறக்க அனுமதி அளிக்க வேண்டும்’ எனக் கூறப்பட்டிருந்தது.

அவர்களின் வாதத்தைக் கேட்ட நீதிமன்றம் ‘ கடைகளை அதிகாலை 2 மணி வரைத் திறக்கலாம். மேலும் பாதுகாப்பு முறைகள், ஷிப்ட் முறையில் பணியாளர்களை நியமிப்பது உள்ளிட்டவற்றை முறையாகப் பின்பற்ற வேண்டும்’ என்று அறிவுறுத்தியுள்ளது,

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கரூர் துயரத்திற்கு முதல்வர் எப்படி பொறுப்பாக முடியும்? டாக்டர் ராமதாஸ் கேள்வி!

இந்தியாவில் முதல்முதலாக தனியார் ஹெலிகாப்டர் தயாரிப்பு ஆலை! டாடா எடுக்கும் சூப்பர் முயற்சி..!

விஜய் மீது ஏன் வழக்குப்பதிவு செய்யவில்லை? அரசுக்கு அச்சமா? திருமாவளவன் கேள்வி..!

நடிகை ஷில்பா ஷெட்டி வெளிநாடு செல்ல கூடாது: மும்பை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

லஞ்சம் கேட்டு மிரட்டுகிறார்கள்.. இந்தியாவை விட்டே போகிறோம்.. சென்னை நிறுவனம் அதிர்ச்சி தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments