Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீதிமன்றம் ஒன்றும் தபால் நிலையம் இல்லை – வாட்டர் கேன் வழக்கில் கடுப்பான நீதிபதிகள் !

Webdunia
செவ்வாய், 10 செப்டம்பர் 2019 (09:19 IST)
வாட்டர்கேன்களை வடிவத்தை பெண்கள் கையாளும் விதமாக மாற்றியமைக்க வேண்டுமென தொடரப்பட்ட வழக்கினை நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.

சென்னை போன்ற பெருநகரங்கள் முதல் சிறுநகரங்கள் வரை குடிதண்ணீருக்காக 20 லிட்டர் வாட்டர் கேன்கள் உபயோகப்படுத்தப் படுகின்றன. இந்த கேன்கள் பெரும்பாலும் ஆண்கள் கையாளும் விதமாக இருப்பதாகவும் பெண்களால் தூக்கி சுமக்க முடியவில்லை என்றும் எனவே அவற்றின் வடிவங்களை பெண்கள் எளிதாக கையாளும் விதமாக மாற்றியமைக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் தீபா ஸ்ரீ என்பவர் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை நேற்று விசாரித்த சத்தியநாராயணன், சேஷசாயி அமர்வு நேற்று விசாரித்தது. அப்போது ‘நீங்கள் நினைக்கும் உத்தரவுகளைப் பெற நீதிமன்றம் ஒன்றும் வணிக வளாகம் அல்ல. மேலும் மனுதாரர்களின் கோரிக்கைகளை அரசிடம் கொண்டு சேர்க்க நீதிமன்றம் ஒன்றும் தபால் நிலையம் அல்ல’ எனவும் தெரிவித்து அந்த மனுவை தள்ளுபடி செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கனமழை எதிரொலி: இன்று நடக்கவிருந்த என்னென்ன தேர்வுகள் ஒத்திவைப்பு?

கனமழை எதிரொலி: இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை?

தமிழ்நாட்டில் இன்று 25 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை.. வானிலை எச்சரிக்கை..!

மோடி, அமித்ஷாவை மனைவியுடன் சென்று சந்தித்த ஹேமந்த் சோரன்... என்ன காரணம்?

ஐதராபாத் தெருவில் திடீரென ஓடிய ரத்த ஆறு.. பொதுமக்கள் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments