Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹாசினி கொலை வழக்கில் தீர்ப்பு தேதி அறிவிப்பு

Webdunia
புதன், 14 பிப்ரவரி 2018 (13:24 IST)
தமிழகத்தை மட்டுமின்றி இந்தியாவையே உலுக்கிய ஹாசினி என்ற சிறுமியை கொலை செய்த வழக்கின் தீர்ப்பு தேதி சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கின் தீர்ப்பு வரும் 19ஆம் தேதி வழங்கப்படும் என நீதிமன்றம் அறிவித்துள்ளது.

சென்னையை சேர்ந்த தஷ்வந்த் என்பவர் தன்னுடைய பக்கத்து வீட்டில் வசித்து வந்த ஹாசினி என்ற 6 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்தான். பின்னர் சிறுமியின் உடலையும் எரித்ததாக அவன் மீது வழக்கு தொடரப்பட்டது.

இந்த கொடூர சம்பவத்தில் சிக்கிய போதிலும் இடையில் ஜாமீனில் வெளியே வந்த தஷ்வந்த், பெற்ற தாயை பணத்திற்காக கொலை செய்து மும்பைக்கு தப்பிவிட்டான். இந்த நிலையில் தனிப்படையினர் மும்பை சென்று தஷ்வந்தை பிடித்து வந்து மீண்டும் சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த ஹாசினி கொலை வழக்கின் வாத,பிரதிவாதங்கள் முடிந்து தற்போது தீர்ப்பை நெருங்கியுள்ளது. பிப்ரவரி 19ஆம் தேதி இந்த வழக்கின் தீர்ப்பு வழங்கப்படும் என இந்த வழக்கை விசாரணை செய்து வரும் செங்கல்பட்டு மகளிர் நீதீமன்றம் அறிவித்துள்ளது. சிறுமியை கொலை செய்த தன்ஷ்வந்துக்கு என்ன தண்டனை கிடைக்கும் என்பதை அறிய தமிழகமே காத்திருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிரதமர் மோடியை சந்திக்க அழைப்பு? ஏற்க மறுத்த ஓபிஎஸ்! - அதிர்ச்சியில் பாஜக!

இந்திய முன்னாள் பிரதமர் மகன் குற்றவாளி.. பாலியல் வன்கொடுமை வழக்கில் அதிரடி தீர்ப்பு..!

இந்தியாவின் புதிய குடியரசுத் துணைத் தலைவர் யார்? தேர்தல் தேதி அறிவிப்பு:

அரசாங்க திட்ட விளம்பரத்தில் உங்கள் பெயர் எதற்கு? - ‘உங்களுடன் ஸ்டாலின்’ குறித்து நீதிமன்றம் கேள்வி!

காவல்துறை அதிகாரியின் கன்னத்தில் அறைந்த அமைச்சரின் உறவினர்.. பெரும் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்