ஆவின் பால் டேங்கர் லாரிகள் டெண்டர் ரத்து – நீதிமன்றம் அதிரடி !

Webdunia
ஞாயிறு, 14 ஜூலை 2019 (11:56 IST)
ஆவின் பால் விநியோகம் செய்யும் டேங்கர் லாரிகளின் டெண்டரை நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

ஆவின் பாலை தமிழகம் விநியோகம் செய்ய கடந்த ஜனவரி 7 ஆம் தேதி டேங்கர் லாரிகளுக்கான டெண்டர் அறிவிக்கப்பட்டது. இந்த டெண்டரின் ஆரம்ப மதிப்பு 360 கோடி ரூபாயாகும். இந்த டெண்டருக்கு எதிராக தீபிகா டிரான்ஸ்போர்ட் நிறுவனம் தாக்கல் ஏற்ற உயர் நீதிமன்றம் டெண்டரை இறுதி செய்யக் கூடாது என்று உத்தரவிட்டது.

ஆனால் நீதிமன்ற உத்தரவை மீறி தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சம்மேளனம் டெண்டரை எடுக்கு முயற்சிகளில் ஈடுபட்டது. இதையடுத்து மேலும் சில நிறுவனங்கள் இந்த டெண்டரை இறுதி செய்யக் கூடாது என எதிர்த்தும் தடையை உறுதி செய்ய வேண்டுமெனவும் மனுத்தாக்கல் செய்தனர். அதில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் டெண்டர் அறிவித்தது தவறு எனவும் அவர்கள் சார்பில் வாதாடப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் டெண்டருக்கான தடையை உறுதி செய்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தீபாவளி மது விற்பனை ரூ.500 கோடியை தாண்டுமா? தயாராகிறது டாஸ்மாக்

பாகிஸ்தானில் இருந்து வந்த 200 ட்ரோன்கள் வழிமறிப்பு.. 287 கிலோ ஹெராயின் பறிமுதல்..!

சீனாவுக்காக அமெரிக்காவை உளவு பார்த்த இந்திய வம்சாவளி? - அமெரிக்காவில் அதிர்ச்சி கைது!

இப்படி எல்லாத்தையும் இழந்து நிக்கிறியே நண்பா! புதினுக்காக கண்ணீர் விட்ட ட்ரம்ப்!

ChatGPTல் 18+ கதைகளையும் இனி கேட்கலாம்: சாம் ஆல்ட்மேன் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments