Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தனியார் மயமாகும் விமான நிலையங்கள் – டெண்டர் தேதி அறிவிப்பு

Advertiesment
தனியார் மயமாகும் விமான நிலையங்கள் – டெண்டர் தேதி அறிவிப்பு
, செவ்வாய், 18 டிசம்பர் 2018 (09:16 IST)
6 விமான நிலையங்களைத் தனியாருக்கு விற்க எடுக்கப்பட்டுள்ள முடிவில் டெண்டர் தேதியை அறிவித்துள்ளது இந்திய விமான நிலையங்கள் ஆணையம்.

லக்னோ, ஜெய்ப்பூர், அகமதாபாத், கவுகாத்தி, மங்களூரு மற்றும் திருவனந்தபுரம் ஆகிய ஆறு விமான நிலையங்களையும் தனியாரிடம் ஒப்படைக்க முடிவுசெய்யப்பட்டுள்ளது. அப்படி ஒப்படைக்க்கும் பட்சத்தில் இந்த விமான நிலையங்களின் செயல்பாடுகள், மேலாண்மை மற்றும் மேம்பாடு உள்ளிட்ட அனைத்துப் பணிகளும் தனியாருக்கு 50 ஆண்டுகள் காலத்துக்கு வழங்கப்படவுள்ளது. ஏற்கனவே இதுபோல டெல்லி மற்றும் மும்பை விமான நிலையங்களைத் தனியாரிடம் ஒப்படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுவரை அரசுக் கட்டுப்பாட்டில் இயங்கி வந்த விமான நிலையங்கள் இப்போது தனியாரிடம் ஒப்படைக்கப்பட இருப்பதால் அதில் பணிபுரியும் பணியாளர்கள் மத்தியில் இதற்கு எதிர்ப்பு உருவாகியுள்ளது. ஆனாலும் அதைக் கண்டுகொள்ளாத இந்திய விமான நிலையங்கள் ஆணையம் ஒப்பந்தத்திற்கு விண்ணப்பிக்க கடைசி நாள் பிரவரி 14, 2019 என அறிவித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தி.மு.க. பாணியில் அ.ம.மு.க. எம்.எல்.ஏ.க்களை இழுக்கும் அ.தி.மு.க. !