Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நாளைக்குள் சிறுமி உடலை வாங்காவிட்டால்...? - நீதிமன்றம் எச்சரிக்கை!

Advertiesment
நாளைக்குள் சிறுமி உடலை வாங்காவிட்டால்...? - நீதிமன்றம் எச்சரிக்கை!
, வெள்ளி, 22 ஜூலை 2022 (12:14 IST)
கள்ளக்குறிச்சியில் உயிரிழந்த மாணவியின் உடலை நாளைக்குள் பெற்றோர் வாங்கிக் கொள்ள வேண்டும் என நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சியில் தனியார் பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவமும் அது தொடர்பான போராட்டங்கள், வன்முறைகளும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. இதுதொடர்பான வழக்கில் சிறுமியின் உடலை மறு பிரேதபரிசோதனை செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
 
அதையடுத்து மறுபிரேத பரிசோதனை முடிந்த நிலையில் பெண்ணின் பெற்றோர்கள் மேல்முறையீடு செய்திருந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் பெண்ணின் பெற்றோர்கள் நாளை காலை  மணிக்குள் பெண்ணின் உடலை பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும், இல்லாவிட்டால் காவல்துறை மேல் நடவடிக்கை எடுக்கும் என்றும் தெரிவித்துள்ளது. இதனால் உயிரிழந்த மாணவியின் இறுதி சடங்குகள் நாளை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூல்! - விமான போக்குவரத்து அமைச்சகம் எச்சரிக்கை!