Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

டூ வீலரில் டிரிபிள்ஸ் பயணம் – காவல்துறைக்கு நீதிமன்றம் கண்டனம் !

Advertiesment
டூ வீலரில் டிரிபிள்ஸ் பயணம் – காவல்துறைக்கு நீதிமன்றம் கண்டனம் !
, செவ்வாய், 14 மே 2019 (10:22 IST)
இரு சக்கரவாகனங்களில் 2 பேருக்கு மேல் பயணம் செய்வதைக் காவல்துறைக் கண்டுகொள்வதில்லை என உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

2010 ஆம் நடந்த விபத்து ஒன்றில் பாதிக்கப்பட்ட கணேசன், ரகு என்ற இருவர் தங்களுக்கான இழப்பீட்டை அதிகரிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தனர். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது

வழக்கை விசாரித்த நீதிபதி ’மனுதாரர்கள் இருவரும் டூ விலரில் 4 பேராக பயணம் செய்த போது விபத்துக்குள்ளாகியுள்ளனர். இரண்டு பேருக்கு மேல் டூ வீலரில் செல்லும் போது ஓட்டுபவருக்கு சிரமம் ஏற்பட்டு அதனாலும் விபத்துகள் ஏற்படுகின்றன. இதனால் அவர்களுக்கும் விபத்தில் பங்கு உள்ளது. இதனைக் கருத்தில் கொண்டே இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது’ எனக் கூறி மேல் முறையீட்டு மனுவை ரத்து செய்தனர்.

இதுபோல இரண்டு பேருக்கு மேல் இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்வது விதிகளுக்கு முரணானது எனவும் அதனைக் காவலர்கள் கண்டுகொள்வதில்லை எனவும் நீதிபதி கண்டனம் தெரிவித்தார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் ரத்து ? – நீதிமன்றத்தில் மனு !