25 குழந்தைகள் மரணத்திற்கு தமிழக அரசின் அலட்சியமே காரணம்: இருமல் மருந்து விவகாரம் குறித்து ஈபிஎஸ்..!

Mahendran
வெள்ளி, 17 அக்டோபர் 2025 (14:17 IST)
இருமல் மருந்து விவகாரத்தில் 25 குழந்தைகள் மரணத்திற்கு  தமிழக அரசின் அலட்சியமே காரணம் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
 
 உலக சுகாதார நிறுவனம் எச்சரித்த பின்னரும், தமிழக அரசு அலட்சியமாக இருந்ததால்தான் உயிரிழப்புகள் நேர்ந்தன. காஞ்சிபுரத்தில் உள்ள ஒரு தனியார் மருந்து நிறுவனம் தயாரித்த இருமல் மருந்துதான் இந்த 25 குழந்தைகள் பலியாக காரணம்.
 
சம்பந்தப்பட்ட மருந்து நிறுவனத்தின் மீது முறைகேடு கண்டறியப்பட்டு ஏற்கெனவே தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், 2024 மற்றும் 2025ஆம் ஆண்டுகளில் தமிழக அரசு அந்த நிறுவனத்தில் சோதனை செய்ய தவறிவிட்டது. இதனால் மருந்து உற்பத்தியை கண்காணிக்காமல் விட்டதால் இந்த மரணங்கள் நிகழ்ந்துள்ளன.
 
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று மாலை 22 மாவட்டங்களில் மழை கொட்டும்: வானிலை ஆய்வு மையம் தகவல்...!

25 குழந்தைகள் மரணத்திற்கு தமிழக அரசின் அலட்சியமே காரணம்: இருமல் மருந்து விவகாரம் குறித்து ஈபிஎஸ்..!

கோல்ட்ரிப் மருந்து விவகாரம்! மத்திய அரசீன் அலட்சியமே காரணம்! - மா.சுப்பிரமணியன் குற்றச்சாட்டு!

ஆரம்பமே 42% கூடுதல் மழை.. இன்னும் அதிகரிக்கும் மழை! - வானிலை ஆய்வு மையம்!

முதல்முறையாக நேருக்கு நேர் சந்திக்கும் ஜெலன்ஸ்கி - புதின்? - ட்ரம்பின் அடுத்த போர்நிறுத்த வியூகம்!

அடுத்த கட்டுரையில்
Show comments