Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சூரிய ஒளியில் கொரோனா வைரஸ் அழிகிறது - அமெரிக்க விஞ்ஞானிகள் தகவல்

Advertiesment
சூரிய ஒளியில் கொரோனா வைரஸ் அழிகிறது - அமெரிக்க விஞ்ஞானிகள் தகவல்
, வெள்ளி, 24 ஏப்ரல் 2020 (17:14 IST)
அமெரிக்காவின்  உள்நாட்டு பாதுக்காப்புத்துறை செயலாளர் தொழில்நுட்பத் துணை செயலாளர் வில்லியம் பிரையன் வெள்ளை மாளிகையில் செய்தியாளார்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது :

பூமியின் மேற்பரப்பில் உள்ள வைரஸ்களையும், காற்றில் உள்ள வைரஸ்களையும் சூரிய ஒளி அழிக்கும் தன்மை கொண்டது.சூரிய ஒளியில் புற ஊதாக்கதிர்கல் வைரஸ்களின் மரபணுப் பொருட்களை சேதப்படுத்தி பெருகும் திறனை முடக்கிவிடுவதாக அறிவித்துள்ளார்.

மேலும், வெப்பம் மற்றும் ஈரப்பதம் ஆகிய இரண்டும் வைர்ஸ் இருப்பதற்காக சூழல் இல்லை என தேசிய உயிரி ஆய்வு மையத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் அடிப்படையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய உயிரி ஆய்வு மையத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் அடிப்படையிலான் இந்த முடிவு குறித்து பிற விஞ்ஞானிகளால் வெளிமதிப்பீடு செய்யப்படவில்லை. சூரிய ஒளி வெப்பம் , ஈரப்பதம் ஆகியவை கொரோனா வைரஸை ஒழிக்கும் என்றாலும் இந்தக் கோடைகாலத்தில் வைரஸை தடுக்கும் முறைகளை தவறவிடக் கூடாது என தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரெட்மி 10X என்ன விலையில் என்னென்ன எதிர்ப்பார்க்கலாம்?