Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு !

Webdunia
சனி, 21 மார்ச் 2020 (17:28 IST)
தமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு !

கொரோனா வைரஸ் உலக முழுவதும் அதிகப்படியான உயிர் பலிகளை கொடுத்து வருகிறது. இதுவரை 170 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11,000-த்தை கடந்து உள்ளது. சீனாவில் தற்போது கொரோனா கட்டுக்குள் வந்துள்ள நிலையில், இத்தாலி மற்றும் ஈரான் போன்ற நாடுகள் அதிக பாதிப்பை சந்தித்து வருகின்றன. 

இந்நிலையில், ஈரானில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் 10 நிமிடத்திற்கு ஒருவர் உயிரிழப்பதாகவும், ஒரு மணி நேரத்திற்கு 50 பேர் பாதிக்கப்படுகின்றனர் எனவும் அந்நாட்டு சுகாதாரத்துறை அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் இந்தியாவில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் என்ணிக்கை 259 லிருந்து,298ஆக உயர்வு இந்தியாவில் கொரோனாவால் இதுவரை 4 பேர் உயிரிழப்பு என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மேலும் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனா வைரளால் பதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 65 ஆக அதிகரித்துள்ளது என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிவித்துள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் மேலும்,  3 பேருக்கு கொரோனா  பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளதாவது : தாய்லாந்தில் இருந்து தமிழகத்திற்கு வந்த இருவருக்கும் நியூசிலாந்தில் இருந்து வந்த ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இந்த நிலையில்,நேற்று முன் தினம் இரவு நாட்டு மக்களிடம் பேசிய பிரதமர் மோடி, வரும் மார்ச் 22 ஆம் தேதி, அனைத்து மக்களும் ஊரடங்கு உத்தரவை மேற்கொள்ள வேண்டும், பொதுமக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளது குறிப்பிட்டுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments