தமிழ்நாட்டில் அதிகரித்து வருகிறதா கொரோனா தொற்று? இதுவரை 48 பேருக்கு உறுதி.!

Webdunia
ஞாயிறு, 17 டிசம்பர் 2023 (08:14 IST)
கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் உலகம் முழுவதும் பெரும் அச்சத்தை ஏற்படுத்திய நிலையில் தற்போது மீண்டும் அதிகரித்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

குறிப்பாக தமிழகத்தில் படிப்படியாக கொரோனா வைரஸ் பாதிப்பு உயர்ந்து வருவதாக கூறப்படுகிறது.  நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று வேகம் எடுத்து வரும் நிலையில்  தமிழ்நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.  

நேற்று ஒரே நாளில் தமிழகத்தில் 16 பேருக்கும் சென்னையில் மட்டும் நான்கு பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளதாகவும் இதுவரை தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 48 ஆக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

எனவே பொதுமக்கள் மாஸ்க் அணிதல் உள்பட முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

TVK: முதலமைச்சர் வேட்பாளராக விஜய்!.. அதிர்ச்சியில் அதிமுக!.. தவெக முடிவு சரியா?!...

திருடப்படும் மக்கள் தீர்ப்பு; வாய்திறக்காத தேர்தல் ஆணையம்! முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்..

ராகுல் காந்தி உண்மையை மட்டுமே பேசுவார்: வாக்குத் திருட்டு மூலம் என்.டி.ஏ. ஆட்சி அமைக்க முயற்சி.. பிரியங்கா காந்தி

"திமுகவுக்குப் போட்டியாளர் த.வெ.க. மட்டும்தான்": 2026 தேர்தல் குறித்து விஜய் அதிரடி

டாக்டர் வீட்டில் திடீர் ரெய்ட்.. கஞ்சா உள்பட ரூ.3 லட்சம் போதைப்பொருள் பறிமுதல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments