அடுத்த 2 வாரங்களில் இந்தியாவின் குறிப்பிட்ட மாநிலங்களில் கொரோனா பாதிப்பு உச்சம் தொட வாய்ப்பு என மத்திய அரசு குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு உச்சத்தை எட்டி தற்போது மெல்லமாக குறையத் துவங்கியுள்ளது. இந்தியாவில் நாள் ஒன்றுக்கு 4 லட்சம் வரை இருந்த கொரோனா பாதிப்பு தற்போது 2.63 லட்சமாக குறைந்துள்ளது. இருப்பினும், தற்போதுவரை தமிழத்தில் கொரோனா பாதிப்பு ஏறுமுகமாகவே இருக்கிறது.
இந்நிலையில், அடுத்த 2 வாரங்களில் தமிழகம், பஞ்சாப், அஸாம் ஆகிய மாநிலங்களில் கொரோனா பாதிப்பு உச்சம் தொட வாய்ப்பு என மத்திய அரசு குழு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆம், தமிழகத்தில் மே 29 ஆம் தெதியில் இருந்து 31 ஆம் தேதிக்குள்ளும், அஸாமை பொருத்த வரை மே 21 ஆம் தேதிக்குள்ளும் கொரோனா பாதிப்பு உச்சத்தை எட்ட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பஞ்சாப்பில் மே 22 ஆம் தேதிக்குள்ளும், ஹிமாசல பிரதேசத்தில் மே 24, மேகாலயாவில் மே 31, திருபுராவில் மே 27 ஆகிய தேதிகளுக்குள் அதிக கொரோனா பரவல் எண்ணிக்கையை காண முடியும் என கணிக்கப்பட்டு மத்திய குழு சார்பில் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.