Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா வைரஸ் எதிரொலி: நடுத்தெருவில் நடந்த திருமணம்

Webdunia
ஞாயிறு, 22 மார்ச் 2020 (10:52 IST)
நடுத்தெருவில் நடந்த திருமணம்
இந்தியாவில் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வரும் நிலையில் இன்றைய கணக்கின்படி 350க்கும் மேற்பட்டோர் இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த நிலையில் பிரதமரின் வேண்டுகோளை அடுத்து இன்று நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது
 
காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை 14 மணி நேரம் வீட்டை விட்டு யாரும் வெளியே வராமல் இருக்க வேண்டும் என்ற பிரதமரின் வேண்டுகோள் செவிசாய்க்கப்பட்டு அதன்படி மக்கள் நடந்து வருகின்றனர் இந்த நிலையில் ஏற்கனவே இன்றைய தேதியில் நடப்பதாக நிச்சயம் செய்த பல திருமணங்கள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன. இருப்பினும் ஒரு சில திருமணங்கள் மட்டும் திட்டமிட்டபடி நடந்து வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது 
 
அந்த வகையில் விருத்தாச்சலம் அருகே ஒரு ஜோடிக்கு இன்று திருமணம் கோவிலில் நடத்த முடிவு செய்யப்பட்டது. ஆனால் இன்று சுய ஊரடங்கு உத்தரவு காரணமாக கோவில்கள் மூடப்பட்டதால் திருமணத்தை இன்னொரு நாளில் வைத்துக் கொள்ளுங்கள் என கோவில் நிர்வாகிகள் அறிவுறுத்தினர். ஆனால் மணமக்களும், மணமக்களின் உறவினர்களும் இன்று திருமணம் நடத்தியே தீரவேண்டும் என்று முடிவு செய்து அந்த கோவிலுக்கு முன் சாலையிலேயே திருமணத்தை நடத்த முடிவு செய்தனர். நடுரோட்டில் நின்று மணமகளுக்கு மணமகன் தாலி கட்டியதும் சுற்றியிருந்தவர்கள் வாழ்த்து தெரிவித்தும் வித்தியாசமானதாக இருந்தது. இது குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகம் முழுவதும் வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல்: முககவசம் அணிய அறிவுறுத்தல்..!

ஆட்சியில் இருக்கிறோம் என்ற ஆணவம் வேண்டாம்..! - முதல்வருக்கு தமிழிசை கண்டனம்

6 மாவட்டங்களுக்கு நாளை ஆரஞ்சு அலர்ட்: வானிலை எச்சரிக்கை..!

வீடு தொடங்கி வீதி வரை பெண்கள் மீதான வன்முறை அதிகரித்து வருகிறது: கனிமொழி எம்பி..

ராமதாசுக்கு வேலையில்லையா? ஸ்டாலின் அதிகார அகம்பாவத்தை காட்டுகிறது: அன்புமணி

அடுத்த கட்டுரையில்
Show comments