Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசிகளுக்கு பஞ்சம்!

Webdunia
திங்கள், 31 மே 2021 (12:50 IST)
தமிழகத்தின் கையிருப்பில் உள்ள 5 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் 2 நாட்களில் காலியாகிவிடும் என அமைச்சர் மா. சுப்பிரமணியன் தகவல். 

 
நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை கடும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் தமிழகத்திற்கு மத்திய அரசு சரியான அளவில் தடுப்பூசியை ஒதுக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. தமிழகத்தின் மக்கள் தொகை கணக்கின்படி 10 சதவீதம் மட்டுமே தடுப்பூசியை மத்திய அரசு வழங்கியுள்ளதாம். 
 
ஆனால், குஜராத் உள்ளிட்ட ஒருசில பாஜக ஆளும் மாநிலங்களில் 20 சதவீதத்துக்கு மேல் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாகவும் தமிழக முதல்வர் குற்றஞ்சாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தமிழகத்தின் கையிருப்பில் உள்ள 5 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் 2 நாட்களில் காலியாகிவிடும் என அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். 
 
இது குறித்து மேலும் அவர் தெரிவித்ததாவது, 25 லட்சம் தடுப்பூசிகள் தரவேண்டிய நிலையில் 13 லட்சம் தடுப்பூசிகள் வந்துள்ளன. மத்திய அரசு இன்னும் 12 லட்சம் கொரோனா தடுப்பூசிகளை தர வேண்டியுள்ளது. தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களில் கொரோனா தடுப்பூசிகளான கோவிஷீல்டு, கோவாக்சின் காலியாகிவிட்டது. தற்போது கையிருப்பு இல்லை என்றும், நாளை வரலாம் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாம் தமிழர் கட்சியில் இருந்து யாரும் விலகவில்லை.. அவர்கள் எல்லாம் ஸ்லீப்பர் செல்: சீமான்

சங்கி என்றால் நண்பன் அல்லது தோழன் என்று அர்த்தம்: சீமான் விளக்கம்

கென்யாவை அடுத்து இலங்கையிலும் அதானி ஒப்பந்தம் ரத்து செய்யப்படுகிறதா?

22ஆம் தேதி ஆகியும் இன்னும் ரேசன் கடையில் துவரம் பருப்பு இல்லை: ராமதாஸ் கண்டனம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments