தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் கடந்த ஆண்டில் விதிக்கப்பட்ட கொரோனா விதிமீறல் அபராதங்கள் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில் கடந்த சில நாட்களில் மீண்டும் வேகமாக அதிகரிக்க தொடங்கியுள்ளது. புதிதாக பரவ தொடங்கியுள்ள ஒமிக்ரான் பாதிப்பு தமிழகத்தில் 100ஐ தாண்டியுள்ளது. தமிழகத்தில் தற்போது டெல்டாவும், ஒமிக்ரானும் வேகமாக பரவ தொடங்கியுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டு கொரோனா விதிமுறைகளை மீறியதாக தமிழகம் முழுவதும் 50 லட்சம் பேரிடம் ரூ.105 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மக்கள் கட்டுப்பாடுகளை பின்பற்றினால் மட்டுமே கொரோனாவை கட்டுப்படுத்த முடியும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.