Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வ.வேப்பங்குடி பசுமைக்குடி தன்னார்வ இயக்கம் சார்பில் கொரோனா நிவாரண உதவி !

Webdunia
சனி, 11 ஏப்ரல் 2020 (15:30 IST)
ஏற்கனவே காய்கறிகளை பொதுமக்களுக்கு இலவசமாக கொடுத்து வந்த வ.வேப்பங்குடி பசுமைக்குடி தன்னார்வ இயக்கம் தற்போது ஆதரவற்ற 150 நபர்களுக்கு ,கொரோனா நிவாரணமாக அத்யாவசிய பொருட்களை கொடுத்து உதவிக்கரம் நீட்டினர்.

கொரோனா வைரஸ் எதிரொலி ! வ.வேப்பங்குடி பசுமைக்குடி தன்னார்வ இயக்கம் சார்பில் ஆதரவற்றோர் மற்றும் முதியோர் உதவித்தொகை வாங்கும் 150 நபர்களுக்கு அத்யாவசிய பொருட்களை இலவசமாக அரிசி பருப்புகளை வழங்கினர்.

கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க, 144 ஊரடங்கு தடை உத்திரவு நாடு முழுவதும் அமலில் இருக்கும் நிலையில், தமிழகத்தில், குறிப்பாக கரூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க கரூர் மாவட்ட நிர்வாகமும், காவல்துறையினர் மற்றும் சுகாதாரத்துறையினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, கடவூர் வட்டம், வரவணை கிராமத்தில் இயங்கி வரும் வ.வேப்பங்குடி பசுமைக்குடி தன்னார்வ இயக்கம் சார்பில் அதே கிராமத்தில் உள்ள ஆதரவற்றோர் மற்றும் முதியோர் உதவித்தொகை வாங்கும் நபர்கள் என்று வரவணை கிராமத்தில் உள்ள 16 குக்கிராமங்களில் வசிக்கும் சுமார் 150 நபர்களுக்கு அத்தியாவசிய பொருட்களான அரிசி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது. வரவணை ஊராட்சி மன்ற தலைவரும், முன்னாள் ஒய்வு பெற்ற தலைமை ஆசிரியருமான மு.கந்தசாமி இந்நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து இந்த திட்டத்தினை தொடக்கி வைத்தார். 

இதில் வ.வேப்பங்குடி பசுமைக்குடி தன்னார்வ ஒருங்கிணைப்பாளர் நரேந்திரன் ஆலோசனையின் படி, பசுமைக்குடி தன்னார்வலர்கள் வீடு, வீடாக சென்று கொரோனா வைரஸ் விழிப்புணர்விற்காக சமூக இடைவெளியை கடைபிடித்து வழங்கினர். கரூர் மாவட்டத்திலேயே ஆதரவற்றோர்கள் மற்றும் முதியோர் உதவித்தொகை வாங்குபவர்களுக்கு 5 கிலோ அரிசி, புளி ¼ கிலோ, பருப்பு ¼ கிலோ, மளிகைத்தூள்கள் 150 கிராம், பூண்டு ¼ கிலோ, சீரகம் 150 கிராம் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது இதுவே முதல்முறை ஆகும், அதுவும் 150 நபர்களுக்கு வழங்கப்பட்டதும் முதன்முறையாகும், மேலும், முன்னதாக கடந்த 18 தினங்களுக்கு முன்னதாகவே வ.வேப்பங்குடி பசுமைக்குடி தன்னார்வ இயக்கத்தின் சமுதாய காய்கறி கூடத்தில் விளைந்த காய்கறிகளை இப்பகுதி மக்களுக்கு மட்டுமில்லாமல், கரூர் மாவட்ட அளவில் இலவசமாக விநியோகித்தது குறிப்பிடத்தக்கது.

 

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments