Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தமிழக அரசுக்கு ரூ.5 கோடி நிதியுதவி செய்த சக்தி மசாலா!

தமிழக அரசுக்கு ரூ.5 கோடி நிதியுதவி செய்த சக்தி மசாலா!
, ஞாயிறு, 16 மே 2021 (19:39 IST)
தமிழக அரசுக்கு ரூ.5 கோடி நிதியுதவி செய்த சக்தி மசாலா!
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தமிழகம் தத்தளித்துக் கொண்டிருக்கும் நிலையில் தமிழக அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்கும் வகையில் தொழிலதிபர்கள் திரையுலக பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் தாராளமாக நிதி உதவி செய்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது சக்தி மசாலா நிறுவனம் ரூபாய் 5 கோடி தமிழக அரசின் முதலமைச்சர் நிவாரண நிதி வழங்கியுள்ளது. இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
 
ஈரோட்டில் உள்ள சக்தி மசாலா நிறுவனம் பல்வேறு சமூக பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. கரோனா முதல் அலை வந்த கடந்த ஆண்டும் , பல்வேறு நிவாரணப்பணிகளில் முழு மூச்சுடன் செயல்பட்டார்கள். இந்த ஆண்டும் சக்தி மசாலா நிறுவனம்  பல்வேறு கரோனா நிவரண பணிகளில் தொடர்ந்து  ஈடுபட்டு வருகிறது.
 
தமிழகத்தில் கரோனா பேரிடர் எதிர்கொள்ள நிவாரண நிதியாக அனைவரும் பங்களிப்பு செய்ய வேண்டும் என ஊடகங்கள் வாயிலாக  முதல்வர் ஸ்டாலின், கேட்டுக்கொண்டுள்ளார். அதன்படி, சக்தி மசாலா நிறுவனம் சார்பில்  ரூ.5 கோடி நிவாரண நிதியை தமிழக முதல்வர் நிவாரண நிதிக்கு மே.15 -ஆம் தேதி வங்கி மூலம்  அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து  முதல்வருக்கும் கடிதம் அனுப்பி உள்ளார்கள்.
 
தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையின் கீழ் அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், சுகாதாரம், வருவாய் துறை, காவல்துறை, உணவு வழங்கல் துறை, தொழிலாளர் நலத்துறை, தீயணைப்பு துறை, மாநில பேரிடர் மேலாண்மை துறை, உள்ளாட்சி துறை, அனைத்து மாவட்ட நிர்வாகம் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள்,  களப்பணியாற்றி வரும் பணியாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள், காவலர்கள், ஊர்க்காவல் படையினர், முன்னாள் ராணுவத்தினர்,  தன்னார்வலர்கள்,தொண்டு நிறுவனங்கள் போன்ற அனைவரும் ஒன்றிணைந்து கரோனா தொற்று பரவல் தடுப்பு பணிகளில் போர்க்கால அடிப்படையில் இரவு, பகலாக  ஓய்வின்றி சிறப்பாக பணிபுரிந்து வருவதை சக்தி மசாலா நிறுவனம் சார்பில் வணக்கத்தையும், பாராட்டும், நன்றியும் தெரிவித்து கொள்கிறோம்.  
 
கூடிய விரைவில் கரோனா வைரஸ் முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டு பொது மக்கள் அனைவரும் நலமுடன் வாழ இறைவனை வணங்கி வேண்டுகிறது சக்தி மசாலா நிறுவனம், என நிர்வாக இயக்குநர்கள் பி.சி துரைசாமி. சாந்தி துரைசாமி தெரிவித்துள்ளனர்
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கங்கை நதியில் சடலங்கள்: உ.பி., பீகார் அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுரை