Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3645 பேருக்கு கொரோனா உறுதி !

Advertiesment
Corona promises 3645 persons in one day
, வெள்ளி, 26 ஜூன் 2020 (18:12 IST)
தமிழகத்தில் சுமார் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளானர். மக்கள் பாதிப்படைவதைத் தடுக்க அரசு பலவித நடவடிக்கைகளை துரிதமாக எடுத்து வருகிறது.

நேற்று ஒரே நாளில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கொரொனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிஉலையில், இன்று இதுவரை இல்லாத அளவுக்கு தமிழ்நாட்டில் 2ஆவது நாளாக ஒரே நாள் பாதிப்பு 3 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.

எனவே, தமிழ்நாட்டில் கொரோனா தொற்று மொத்த பாதிப்பு எண்ணிக்கை 74,000 தாண்டியுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 74,622 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் மட்டும் இன்று 1,956 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், அதே சமயம் சென்னையில் இதுவரை இல்லாத வகையில் இன்று ஒரே நாளில்  1,956 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 49,690ஆக உயர்ந்துள்ளாதாகவும் இன்று 46 பேர் பலி பலியானதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பலியானோர் மொத்த எண்ணிக்கை 957ஆக அதிகரித்துள்ளது.

 
மேலும், இன்று ஒரே நாளில் 1,358 பேர் குணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தகக்து.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஓட்டுநருக்கு கொரொனா ... பாதிவழியிலேயே காரில் இருந்து இறங்கிய அமைச்சர்