Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனாவின் ஸ்டாங்க் கோட்டையான சென்னை!!

Webdunia
செவ்வாய், 9 ஜூன் 2020 (10:51 IST)
சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் அதிகபட்சமாக ராயபுரத்தில் இதுவரை 4,023 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 
 
நேற்று தமிழகத்தில் 1,562 பேர்களுக்கு புதிதாக கொரோனா தொற்று பரவி இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 33,229 ஆக உயர்ந்துள்ளது. 
 
கடந்த 24 மணி நேரத்தில் 1500க்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளது தமிழகத்தில் உச்சபட்சமாக பார்க்கப்படுகிறது. மேலும் கொரோனாவால் பாதிப்பு அடைந்த 1,562 பேர்களில் சென்னையில் 1,149 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் என்பதால் சென்னையில் கொரோனா பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 23,298 ஆக உயர்ந்துள்ளது.
 
சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் அதிகபட்சமாக ராயபுரத்தில் இதுவரை 4,023 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அண்ணாநகர் மண்டலத்தில் இதுவரை 2,068 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தண்டையார்பேட்டை மண்டலத்தில் கொரோனா பாதிப்பு 3,019 ஆக அதிகரித்துள்ளது. 
 
மேலும் திரு.வி.க நகரில் 2,273, தேனாம்பேட்டையில் 2,646, கோடம்பாக்கத்தில் 2,539, அடையாறில் 1,325, வளசரவாக்கத்தில் 1,088 ஆக பாதிப்பு எண்ணிக்கை உள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments