Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கொரோனா நோயாளிகளுக்கான உணவு என்ன தெரியுமா? இதோ விவரம் !

கொரோனா நோயாளிகளுக்கான உணவு என்ன தெரியுமா? இதோ விவரம் !
, வெள்ளி, 27 மார்ச் 2020 (08:42 IST)
கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு மருத்துவமனையில் அளிக்கப்படும் உணவுகள் பற்றிய விவரங்கள் வெளியாகியுள்ளன.

உலகம் முழுவதும் கொரொனா வைரஸால் 5.25 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை 29 கொரோனா வைரஸ் நோயாளிகள் கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் கொரோனா நோயாளிகளுக்கு சத்து மிக்க உணவு அளிக்கப்பட வேண்டும். அப்போதுதான் அவர்கள் விரைவில் குணமடைவார்கள் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் தமிழகத்தில் கொரொனா வைரஸ் நோயாளிகளுக்கு அளிக்கபப்டும் விவரங்கள் வெளியாகியுள்ளன.
 
  • காலை 7 மணி – இஞ்சி மற்றும் எலுமிச்சைபோட்டு கொதிக்க வைக்கப்பட்ட தண்ணீர்
  • காலை 8.30 மணி – 2 இட்லி (சாம்பார் மற்றும் வெங்காய சட்னி), சம்பா ரவை கோதுமை உப்மா, 2 முட்டை, பால், பழரசம்
     
  • காலை 11 மணி – சாத்துக்குடி ஜூஸ், இஞ்சி மற்றும் எலுமிச்சையோடு உப்புக் கலந்து கொதிக்க வைக்கப்பட்ட தண்ணீர்
     
  • மதியம் 1 மணி – 2 சப்பாத்தி, புதினா சாதம் (1 கப்), வேகவைத்த காய்கறிகள் (1 கப்), பெப்பர் ரசம் (1 கப்), உடைத்த கடலை (1 கப்)
     
  • மாலை 3 மணி – மிளகுடன் மஞ்சள் கலந்த வெந்நீர்
     
  • மாலை 5 மணி – கொண்டைக்கடலை சுண்டல்
     
  • இரவு 8 மணி -  2 சப்பாத்தி (ஆனியன் சட்னி) இட்லி அல்லது சம்பா கோதுவை ரவை உப்மா, 1 முட்டை

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒரே நாளில் 662 பேர் பலி: இத்தாலியில் கோரத்தாண்டவமாடும் கொரோனா