Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மேலும் 4 சிங்கங்களுக்கு கொரொனா...மக்கள் அதிர்ச்சி

Webdunia
வெள்ளி, 18 ஜூன் 2021 (18:34 IST)
வண்டலூர் உயிரியல் பூங்காவில் மேலும் 4 சிங்கங்களுக்கு கொரொனா தொற்று ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை பரவலால் மக்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் விலங்குகளும் பாதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள 10 சிங்கங்களுக்கு கொரோனா உறுதியான நிலையில் இரண்டு சிங்கங்கள் தொற்று பாதிப்பால் உயிரிழந்தன.

இந்த சம்பவம் விலங்குகள் நல ஆர்வலர்கள், பொதுமக்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் பூங்காவில் உள்ள மற்ற சிறுத்தை, புலி போன்ற விலங்குகளுக்கும் கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இன்று சென்னை அருகேயுள்ள வண்டலூர் பூங்காவில் மேலும் 4 சிங்கங்களுக்குக் கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

4 சிங்கங்களுக்கு இந்தியாவில் வேகமாகப் பரவி  வரும் டெல்டா வகை கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாகப் பூங்கா நிர்வாகம் கூறியுள்ளது.

இந்த சிங்கங்களை விரைவில் குணப்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென அனைத்து தரப்பினரும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதலமைச்சர் போராடி தமிழகத்தில் நீட் விலக்கை கொண்டு வருவார்: சபாநாயகர் அப்பாவு

பெண் மருத்துவரை திருமணம் செய்வதாக வாக்குறுதி அளித்து பாலியல் வன்கொடுமை: ஐ.ஏ.எஸ் அதிகாரி மீது வழக்குப்பதிவு..

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை – மத போதகர் ஜான் ஜெபராஜ் கைது

திமுக கூடாரத்தை விரட்டியடிக்க போகும் கூட்டணி" – நயினார் நாகேந்திரன் ஆவேசம்

திறந்த ஒருசில மாதங்களில் பராமரிப்பு பணிகள்.. குமரி கண்ணாடி இழை பாலத்திற்கு செல்ல தடை..!

அடுத்த கட்டுரையில்
Show comments