Publish Date: Sat, 15 Jan 2022 (12:02 IST)
Updated Date: Sat, 15 Jan 2022 (12:26 IST)
புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் 1,213 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது தினசரி பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளது. முன்னதாக ஆயிரத்திற்கு கீழ் குறைந்து இருந்த பாதிப்புகள் சமீபகாலமாக 2 லட்சத்தை தாண்டியுள்ளது.
புதுச்சேரியில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வர தொடங்கியுள்ளது. தினசரி பாதிப்பும் உயர்ந்துகொண்டே செல்கிறது. இந்நிலையில், புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் 1,213 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 6,785 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருவதாக புதுச்சேரி சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது.
Sugapriya Prakash
Publish Date: Sat, 15 Jan 2022 (12:02 IST)
Updated Date: Sat, 15 Jan 2022 (12:26 IST)