Publish Date: Thu, 30 Sep 2021 (12:21 IST)
Updated Date: Thu, 30 Sep 2021 (12:54 IST)
புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 59 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது தினசரி பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளது. முன்னதாக 1 லட்சத்திற்கும் அதிகமாக இருந்த பாதிப்புகள் சமீபகாலமாக 30 ஆயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளது.
புதுச்சேரியில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வர தொடங்கியுள்ளது. தினசரி பாதிப்பும் உயர்ந்துகொண்டே செல்கிறது. இந்நிலையில், புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 59 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,26,367 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 1,23,697 பேர் குணமடைந்த நிலையில் 828 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுள்ளனர்.